வரப் போகின்ற மனைவி எப்படி இருப்பாள்? என்பதை அறிகின்ற வரத்தை கொடுக்கும் இந்திய இணையத்தளம்!


மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். வரப் போகின்ற மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? என்பதை முன்கூட்டியே அறியும் வரத்தை தருகின்றது இந்தியாவின் இணையத் தளம் ஒன்று.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த இணையத் தளத்தின் பெயர் Biwihotohaisi.com உள்ளத்தில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனைவியிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை இணையத்துக்கு தெரியப்படுத்த முடியும்.


அந்த மனைவி எப்படியான குணங்களை கொண்டு இருப்பாள்? என்பதை இணையம் உங்களுக்கு தெரியத் தரும். மனைவியை தேர்ந்து எடுக்கின்றமைக்கான ஒத்திகையாகவும் இச்செயன்முறையை கருத முடியும்.


மனைவிமார் நான்கு விதம் ஆனவர்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றது இந்த இணையம்.


1) அர்ப்பணிப்பு உடைய குடும்பப் பெண்


2) அடக்க, ஒடுக்கமான பெண்


3) ஊதாரிப் பெண்


4) அடங்காப்பிடாரி பெண் என்பன அந்த நான்கு ரகமும்.


வருங் கால மனைவியிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை கருத்தில் கொண்டு கற்பனை மனைவியை இணையத்தில் கிளிக் பண்ணலாம். அக்கற்பனை மனைவியிடம் இருந்து உங்களுக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு கிடைக்கும்.


உங்கள் கற்பனை மனைவி எப்படிப்பட்டவளாக இருக்கின்றார்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


எதிர்கால மனைவியை தேர்ந்து எடுக்கும்போது இந்த அனுபவம் மிகுந்த பயன் கொடுக்கும் என்கிறார் இந்த இணைய சேவை வழங்குனர்கள்
Read more »

காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!

ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.


உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.


விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Read more »

விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்




தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.


தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.


தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.


திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.


ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.


அந்த தவறை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.


புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.


அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும்.


இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது.


இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.


விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப்படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும்.


தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும்.


தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.


புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன.


இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.


இருப்பினும் சில விஷயங்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும்.


1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.


விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.


எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர்களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது
Read more »
 
-